ஐயையோ! தாய்க் கட்சி மஇகாவின் கதி என்னவாகும்?

- மு. குலசேகரன், மார்ச் 6, 2014.

kula_01 
வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் இந்திய கட்சிகளை தேசிய முன்னணியில் சேர்க்கலாம் என்று பாரிசான் மேலிடம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக  தகவல் வெளி வந்துள்ளது.

இது எந்த வகையில் தேசிய முன்னணியை பலப்படுத்தப் போகிறது என்பது  ஒரு பெரிய கேள்வியாகும். மேலும், அந்த நோக்கத்தை உள்நோக்கிப்பார்த்தால்,  அது இந்தியர்களைப் பிளவுப்படுத்தி அவர்களின் ஒற்றுமையைக்  குலைத்து அதன் வழி அவர்களின் தார்மீக, சட்டப்பூர்வமான உரிமைகளைக் கேட்கும் வலுவை அழிப்பதற்கு போட்ட சதியின் ஒரு பகுதியாக இருப்பது தெரியவரும்.

நல்லா தலைமையேற்றிருக்கும் கட்சியான மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சிதனேந்திரனின் மக்கள் சக்தி கட்சி, மூன்றாகப் பிளந்து கிடக்கும் ஐபிஎப் கட்சி மற்றும் கிம்மா கட்சி ஆகிய அனைத்தும் அவற்றுக்கு தலைமை ஏற்றிருக்கும் தலைவர்களுக்காக, அவர்களுக்கு வளம் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்ட கட்சிகள்.

ஐபிஎப் கட்சி மட்டும் பண்டிதன் தலைமை ஏற்றிருந்த வரையில் ஒர் இலட்சியப் பாதையில் போய்க் கொண்டிருந்தது. அவரின் மறைவிற்குப் பிறகு அந்த இலட்சியம் காணாமல் போய், இப்பொழுது கட்சி யாருக்குச் சொந்தம் என்று மூன்று குழுக்கள் ஒன்றுக்கொண்டு போட்டி  போட்டுக்கொண்டிருக்கும் அளவிற்குவளர்ச்சிஅடைந்துள்ளது.

இந்த 4 கட்சிகளும் ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்த ஒரு சேவையையும் வழங்கியிருப்பதாகத் தெரியவில்லை.

Nalla நல்லா செய்வது இதுதான்: எப்பொழுதெல்லாம் விமான நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரதமருடன் நேரடியாகப் பேசி தீர்வுகாணும்வல்லமை”  உடையவர். மற்ற நேரங்களில் அன்வாரை எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டிவிடலாம் என்கின்ற சீரிய சிந்தனையுடன் வலம் வருகிறவர். ஓர் உற்ற நண்பனை எப்படியெல்லாம் காட்டிக் கொடுத்து அதன்வழி வரும் தீய சுகங்களை அனுபவிக்கலாம் என்பதற்கு நல்ல உதாரணம்  நல்லகருப்பன்!
தனேந்திரனோ விழலுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு மட்டுமே கசிந்ததுபோல, ஹிண்ராப்ட் என்ற பெரும் வயலில் அறுவடைக்குப்பின் தங்கிவிட்ட  புல் போல அவ்வப்போது அரசாங்கம் அவருக்கு மானியம் என்ற பெயரில் போடும் பிச்சையை  மக்களுக்கு கிள்ளிக் கொடுத்து விட்டு தானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொண்டிருப்பவர்.

அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்பொழுது காலியாகும் என்பதற்கேற்ப  இந்த பாரிசான் ஆதரவு கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் அனைத்தும் வேதமூர்த்தி விட்ட இடத்தை எப்பாடுபட்டாகிலும் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்று சுயநல நோக்குடன் எத்தனித்துக் கொண்டிருக்கின்றன என்பதனை மக்கள் புரிந்து கொண்டுதான் உள்ளனர்.

இப்பொழுதெல்லாம் மக்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள்.  நிறைய தகவல் சாதனங்கள் – இணையதளம், டிவிட்டர், முகநூல், வாட்ஸ் அப் – போன்றவற்றால் செய்திகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் நிலையில் இருப்பதால், யார் யார் என்னென்ன மக்களுக்குச் செய்கிறார்கள் என்பதனை அனைவரும் சரியாகவே கணித்து வைத்திருக்கின்றார்கள்.

..காவும் சரி மற்ற இந்திய கட்சிகளும் சரி சாதாரண மக்களை விட்டு விலகி  வெகுதூரம் சென்று விட்டன. சென்ற தேர்தலில் இந்தியர்கள் வெறும் 42 விழுக்காட்டினர் மட்டுமே பாரிசானுக்கு வாக்களித்தனர் என்பதனை பிரதமரே வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார்.

இந்த நிலை பாரிசானுக்கு  சாதகமாக  அடுத்த தேர்தலில் மாறும் என்பதற்கான அறிகுறிகள்  எதுவுமில்லை. அப்படி இருக்கையில் இந்த கொசுருக் கட்சிகள் ஆளும் கட்சியில் இணைவதற்கான முயற்சிகள் யாவும் மக்களுக்கு  எந்த விதத்திலும்  நன்மை பயத்திடப் போவதில்லை. அப்படியே இணைந்தாளும்கூட இதன் பயனை அடையபோவது நல்லாவோ தனேந்திரானாகவோத்தான் இருக்க முடியுமே தவிற சாதரண மக்கள் அல்ல. நஜிப்பிற்கு  ஜால்ரா போட்டு வந்ததனால்  கிடைத்த பிச்சை என்றே இதனைக் கூறலாம்.

ஓர் இனம் ஒரு மொழியைப் பேசும் கட்சியைச் சார்ந்தவர்கள் தங்கள் உள்விவகாரங்களில் சகோதர உணர்வோடு உடன் பாடு காண இயலாமையால் வேற்று மொழி பேசி வேறு இனத்தைச் சார்ந்தவரின் (அவர் பிரதமராகவே இருக்கட்டுமே) உதவியியை நாடுவது ஒரு மானக்கேடான செயல். அதற்கும் மேலாக அதே பிரதமரிடம் சென்று என்னை உங்கள் கட்சியுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்பது அதைவிட வெட்கக்கேடானது. தோழனோடு ஏழமை பேசேல் என்பது முது மொழி.  உன்னுடைய பலவீனங்களை மாற்றானுடன் வெளிப்படையாக விவாதித்து உதவி கேட்பது அந்த  மூன்றாம் மனிதனின் மனதில் உன்னைப்பற்றிய அபிப்பிராயாம் எவ்விதமாக பதிவுசெய்யப்படும் என்பதனை மொத்த ஐபிஎப் உறுப்பினர்களும் உணர்ந்து பார்க்கவேண்டும். இந்தியர்களின் ஒரு பிரிவினரை மட்டுமே குறியாக வைத்து  அமைக்கப்பட்ட ஐபிஎப் கட்சியானது அந்த சிறிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களிடையேகூட ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத போது எப்படி  பாரிசானுடன் இணைந்து ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் சேவை செய்யப் போகிறது?  

பாரிசானில் ..காவைத் தவிர வேறு எந்த கட்சியும் இந்தியர்களைப் பிரதிநிதித்து அங்கம் வகிக்கக் கூடாது என்று சாமிவேலு Minister MIC-Palanivel & Samyபிடிவாதமாக இருந்தார். இப்பொழுது அந்தப் பிடிவாதம் பழனிவேலு வந்தவுடன் தளர்ந்து விட்டதோ? அல்லது பாரிசானை தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு இணங்க வைக்கும் ஆற்றலை பழனிவேல் இழந்து விட்டாரோ? ..காவின் தற்போதைய நிலை என்ன என்பது விளக்கப்பட வேண்டும்.

இந்திய மக்கள் யார் பாரிசானுடன் இணைகிறார்கள் என்பதைப் பெரிதுபடுத்துவதில்லை. மக்களுக்கு அக்கட்சிகள் என்ன செய்தன என்றுதான் தரம் பார்க்கிறார்கள். இந்த நான்கு கட்சிகளும் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் இந்தியக் கலாச்சாரத்துக்கும் ஆபத்து என்று வந்த  பொழுது அதனைத் தற்காத்து எதிர்ப்பு தெரிவித்ததாக  தெரியவில்லை. பெர்காசா போன்ற இனவாத அமைப்புக்கள் மொழிக்கும் இனத்துக்கும் ஊறு விளைவிக்க முற்பட்டபோது நல்லகருப்பன், தனேந்திரன், ஐபிஎப்காரர்கள் எங்கு போய் ஒளிந்து கொண்டனர்? நல்ல வேளையாக இந்தியர்களின் மேல் அக்கறை கொண்ட  எதிர்கட்சி உறுப்பினர்கள் நிறைய பேர் இருப்பதனால் அவ்வப்போது தங்கள் ஆட்சேபங்களை பதிவு செய்து இந்தியர்களின் தன்மானத்தை நிலை நிறுத்தி வந்துள்ளனர்.

IPF 1மக்களின் செல்வாக்கு தங்களுக்கு இருப்பதாக இந்த 4 கட்சிகளும் அடிக்கடி கூறிக்கொள்கின்றன. உண்மையான செல்வாக்கு பதவி நியமனத்தில் வருவதல்ல. அந்தப் பதவி மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு  வழங்கப்படுமேயானால் அதுவே மக்களின் செல்வாக்கை பிரதிபலிக்கும் ஒரு பதவியாக அமையும். இந்த நான்கு கட்சிகளும் அந்தத் தகுதியைக் கொண்ட தலைவர்களைக் கொண்டுள்ளனவா என்பதனை அதன் உறுப்பினர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
எத்தனைக் கட்சிகளை பாரிசான் தன்னுடன் இணைத்துக் கொண்டாலும் பாரிசான் மீது மக்களின் (குறிப்பாக இந்தியர்களின்) வெறுப்பு  அதிகரிக்குமே தவிர குறையப் போவதில்லை. அதுவும் வேதமூர்த்தி பதவி விலகியதிலிருந்து மக்கள் பாரிசானை இன்னும் அதிகமாக வெறுக்கத் தொடங்கி விட்டனர்.

பெரும் ஆரவாரத்துடன்  தேர்தலின் கடைசி நாட்களில் மக்களறிய செய்து கொண்ட ஒப்பந்தத்தையே வெளிப்படையாக  மீறியது இந்த பாரிசான் அரசாங்கம். இனி எத்தனைக் கட்சிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டாலும் பாரிசானின் எதிர்காலம் கேள்விக்குறியே? அதற்கு முன்னோடியாக விளங்கப்போவது காஜாங் இடைதேர்தல் என்பது வெள்ளிடைமலை.

Comments