அரசியலா? சமூகமா?

குலசேகரன்,  து. காமாட்சி, அ. சிவநேசன், டிஎபி, பெப்ரவரி 14, 2014.
 
1kulaசமீபத்தில் நான், சபாய் சட்ட மன்ற உறுப்பினர் து.காமாட்சி, சுங்கை சட்ட மன்ற உறுப்பினர்  .சிவநேசன் ஆகியோர்நாம்என்ற இயக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டதை ஆட்சேபித்து பலரிடமிருந்து கண்டனக் குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.

என் மேலும் என் கட்சியின் மேலும் நல்ல அபிப்பிராயமும்  நம்பிக்கையும் வைத்துள்ள பல கட்சி அபிமானிகள், பொது மக்கள், துணை அமைச்சர் டத்தோ சரவணன் ஏற்பாடு செய்தநாம்”  தொடக்க விழாவில் நாங்கள் கலந்துகொண்டிருக்கக் கூடாது, அது ..காவின் இயக்கம் ஆகவே எதிர்கட்சியிலுள்ள நாங்கள் அதற்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்கின்ற தோரணையில் பலர்  முகநூல்வழியாகவும்  குறுஞ் செய்திகள் வாயிலாகவும் தங்களின் ஆட்சேபங்களை தெரிவித்துள்ளனர்

முதலில், அவர்களுக்கு  எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எழுப்பிய கண்டனங்கள், அவர்கள் எங்கள் பால் இது காறும் வைத்திருக்கும் நம்பிக்கையையும் , எங்கள் கட்சியாகிய ஜனநாயக செயல் கட்சியின் மீதுள்ள வலுவான பற்றுதலையும் நன்கு  புலப்படுத்துகின்றது.
அந்த வகையில் அவர்களுக்கு இது குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளோம்.

எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் முதன்மைக் குறிக்கோலாக சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதைத்தான்  சொல்லி வருகின்றன. ஆனால், அவற்றின்  செயல் வடிவங்கள் கட்சிக்குக் கட்சி மாறுபடுகின்றன. ஆளும் கட்சிக்கு பண பலம் இருப்பதனால் அதன் திட்டங்களை  நிறைவேற்றுவதில் தடங்கல்கள் அவ்வளவாக வருவதில்லை.

ஆனால்,  எங்களைப் போன்ற  எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, சமுதயத்திற்கான நல்ல திட்டங்கள் கைவசம் இருந்த போதும் அதை நிறைவேற்றுவதற்கான பணபலம்  இருப்பதில்லை. ஒரு நல்ல காரியம் மக்களின் நன்மைக்காக செய்யப்படுகிறதென்றால் அதனை ஆதரிக்க வேண்டியது ஓர் உண்மையான அரசியல்வாதியின் கடமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால்,  இந்தநாம்இயக்கம் இந்திய இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகுக்கும் ஒரு நல்ல திட்டமாகும் .  இந்த திட்டத்தை ஆதரித்து அதன் விளக்கக்கூட்டதில் கலந்து கொள்வதில் ஒரு நியாயம்  இருப்பதாக கருதியதால்தான் அதில் நாங்கள் கலந்து கொண்டோம்.

அப்படி கலந்து கொண்டதால் , நாங்கள் எங்கள் கட்சி கொள்கைக்கு எதிராகச் செயல் பட்டோம் என்று சொல்ல முடியாது. .செ.கட்சியும் . .கா வும் வெவ்வேறு கொள்கைகள் உடையவை என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் ஆளும் கட்சி,  நாங்கள் எதிர்கட்சி . நாடாளுமன்றத்தில் எதிரில் அமர்ந்திருப்பதனால் மட்டுமே நாங்கள் எதிர்க்கட்சியென பெயரெடுத்துள்ளோம். அதற்காக நாங்கள் எதிரிகளல்ல. நாளை நாங்களும்  ஆளும் கட்சியாகலாம்.  ..கா எதிரில் அமர்ந்து எதிர்கட்சி என்ற பெயரெடுக்கலாம்.  ஆனால் எங்கள் இருவரின் குறிக்கோள் என்றுமே மக்கள் சேவைதான் .
நாங்கள் அந்த இயக்க விழாவில் கலந்துகொண்டதானால், ..கா விற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று  சொல்வது தவறு. அவர்கள் போட்ட திட்டம் வெற்றி பெற்று அதனால்  இந்திய இளஞர்கள் பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் ஆதரவு வழங்கினோம். அரசியலில் வெவ்வேறு மூலையில் நாங்கள் அமர்ந்திருந்தாலும், சமூக நலன் கருதி ஒருவருக்கொருவர் ஆதரவு தருவது அரசியல் கண்ணியம் என்று நாங்கள் கருதுகிறோம்.

அறிஞர் அண்ணா சொன்னது போல எல்லா காலக் கட்டத்திலும் , எதிர்க் கட்சியினரை எதிரிகள் போல் பார்க்கக் கூடாது. அரசியலில் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், கருத்து மோதல்கள் அவ்வப்போது  ஏற்பட்டாலும் அதற்கும் அப்பால் அரசியல் நாகரீகம் , பண்பாடு, கண்ணியம், மனித நேயம் என்ற பலவற்றை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதன் அடிப்படையில்தான்  சரவணன் எங்களை மதித்து, எங்கள் மீதும், நாங்கள் சார்ந்த கட்சியின் மீதும் உள்ள நல்ல என்ணத்தினால் எங்களை  அழைத்தபோது நாங்கள் அந்த அழைப்பை ஏற்றோம்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இயங்குவது என்பது ஒன்றும் புதிதல்ல . ஏற்கனவே, நான்  தமிழ்ப் பள்ளிகளுக்காக நாடளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிகளுக்குமான ஒரு சந்திப்புக் கூட்டத்தை  ஏற்பாடு செய்து அதில் ..காவைவும் கலந்து கொள்ள செய்துள்ளேன். அப்போது பிரதமர் துறையில் அமைச்சராக இருந்த  நஸ்ரிதான் அதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

..கா ஹோல்டிங்கஸ் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவு கொடுத்து அதன் பங்குகளை நான் வாங்கியுள்ளேன். ஆனால், அது பிற்காலத்தில் குட்டிச்சுவராக்கப்பட்டபோது இதே குலசேகரன்தான்  அதை எதிர்த்து போராடி அதனால் அடியும் வாங்கிக்கொண்டான்.

இன்னும்,  பல திருமணங்களில், அரசு சாரா கூட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கட்சி பேதமின்றிக்  கலந்து கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கும்நாம்இயக்கம் தன் இலக்கை நோக்கி போகாமல் தவறான பாதையில் பயணிக்குமாயின், அதற்கு முதல் எதிர்ப்புக் குரல் இந்த குலசேகரனிடமிருந்துதான் வரும் என்றும் கூறிக்கொள்கிறேன்.
  
சமூக நலன்  என்று வரும் பொழுது சீன சமூகம்  கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் ஒன்று கூடி  செயலாற்றுவதை  நாம் பார்க்கின்றோம். அதே போல இந்திய  சமூக நலம் கருதி நாம் ஒன்றுகூடி ஒருவொருக்கொருவர்  ஆதரவு தருவதில் எந்த தவறும் இல்லை என்பது எங்களின் தாழ்மையான கருத்து.

Comments