இப்ராகிம் அலிக்கு இந்திய சீன வர்த்தக உறவு வேண்டும்; சீனர்களும் இந்தியர்களும் வேண்டாம்!

இப்ராகிம் அலிக்கு இந்திய சீன வர்த்தக உறவு வேண்டும்; சீனர்களும் இந்தியர்களும் வேண்டாம்!

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 7, 2013.

kulasegaranமலாய்க்காரார்கள் இன்னும் ஏழ்மை நிலையிலேயே இருப்பார்களேயானால் இன்னொரு கலவரம் மே 13ல் நிகழ்ந்தது போல வர வாய்ப்புள்ளது என்று பெர்காசாவின் தலைவர் இப்ராஹிம் அலி அண்மையில் மலேசியன் இன்சைடெர் ஊடகத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நாட்டின் மக்கள் எண்ணிக்கையில் 60 விழுக்காடாக இருக்கும் மலாய்க்காரர்களின் பாதுகாப்பும், முன்னேற்றமும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தபட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

சுதந்திரம் அடைந்து 56 வருடங்கள் ஆகியும் கூட மலாய்க்காரர்கள் பொருளாதாரத்தில் 30% அடைவு நிலைபெறவில்லை என்பது அவரின் ஆதங்கமாக தெரிகிறது.

மலாய்க்காரர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதற்கான காரணம் மலாய்க்காரர்களும் இந்த பாரிசான் அரசாங்கமும்தான் என்பதனை இப்ராஹிம் அலி முதலில் உணரவேண்டும்.


மே 13 கலவரத்துக்கு முன்பு பொருளாதார நிலைமை மலாய்க்கார்களுக்கு சாதகாமாக இல்லையென்றாலும் அதன் பின் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையில் அவர்கள் முன்னேற பல வழிகள் இருந்தும் அவற்றை முறையாக பயன் படுத்தாமலும்,  ஒரு சில பூமி புத்ராக்கள் மட்டுமே பயன் பெற அனுமதிக்கப்பட்டதாலும் பெரும்பாலான மலாய்காரர்கள் அதனால் பயனடையாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. இதற்கு சீனர்களோ இந்தியர்களோ நிச்சயமாக காரணமில்லை. இது அலிக்கு தெரியாததல்ல.

அடிக்கடி இனக்கலவரங்கள் மூளும் என்று பயமுறுத்துவதனால் இப்ராஹிம் அலி தான் ஒரு முட்டாள் என்னபதனைIbrahim ali2 திரும்ப திரும்ப மக்களுக்கு நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றார்.

சிங்கப்பூர் மலேசியை விட்டு 1965ல் பிரிந்து போனபோது அந்த நாட்டில் என்ன இருந்தது? இன்று அந்த நாடு உலகத்தில் உள்ள சிறந்த முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. அதற்கு காராணம் அந்த நாட்டின் சிறப்பான நிர்வாகம், அதன் திட்டங்கள் எல்லா மக்களுக்கும் போய் சேரவேண்டும் என்ற நோக்கம். அதன் அமுலாக்கங்களில்  இன பாகுபாடு இல்லாமை. எல்லோருக்கும்  சமமான வாய்ப்பு. இவற்றைக் கொண்டுதான் அந்த நாடு ஒரு சிறந்த  வாழ்க்கைத் தரத்தை அதன் மக்களுக்கு வழங்க முடிந்திருக்கின்றது.

சிங்கப்பூரை முன்னுதாரணமாகக் கொண்டு செயல் பட்டிருந்தால் மலேசிய இன்று ஒரு சிறந்த நாடாக பொருளாதரத்தில் முன்னேறிருக்க முடியும்.

மலேசியா 28 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சிறிய நாடு. பொருளாதார உலக மயத்தில் நம் நாடு மற்ற நாடுகளின் வர்த்தகத்தை கட்டாயம் நாட வேண்டியுள்ளது. இன்றைய நிலையில் சீனாவும், இந்தியாவும் ஆசியாவின் பெரிய பொருளாதார வல்லரசுகள். அவ்விரு நாடுகளின் இருவழி வாணிபம் வழி பெறப்படும் அண்ணியச் செலாவணி நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தேவைப் படுகிறது. சீனாவுடனான நமது வாணிபம் 20% தாண்டி மலேசியாவின் வாணிபத்தில் முதலிடம் வகிக்கிறது.

வருடத்திற்கு 16 ஆயிரம் கோடி வெள்ளிக்கான ஏற்றுமதியும் 14 ஆயிரம் கோடி வெள்ளிக்கான இறக்குமதியும் செய்து நிகர வருவாயக 2 ஆயிரம் கோடி வெள்ளி மலேசிய சீனாவிலிருந்து பெறுகிறது.

அதே போல, இந்தியாவிற்கு 9,600 கோடி வெள்ளி மதிப்புள்ள ஏற்றுமதியையும் 3600 கோடி வெள்ளிக்கான இறக்குமதியையும்  செய்திருக்கிறது.

மேலும், மலேசியாவிற்கு வரும் இந்திய சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை சென்ற வருடம் 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மலேசியாவின் முக்கால்வாசி ஏற்றுமதி செம்பனை எண்ணெய்யை முதன்மையாகக் கொண்டிருக்கின்றது. அதனால் பயன் பெறும் நிறுவனங்களான பெல்டாவும் சைம் டார்பியும் மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தில் உள்ள நிறுவனங்கள் ஆகும்.

இப்ராஹிம் அலியின் பேச்சானது இந்த நாட்டில் வாழும் இந்தியர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயலாகும். இதனால் சீன இந்திய இரு வழி வர்த்தகம் பாதிப்புற வழியுள்ளது.

அப்படி நடந்தால், அது மலேசிய நாட்டின் வருமானத்தை பெரிதும் பாதிக்கும். அதனால் அதிகமாக பாதிக்கப் படப்போவது மலாய்க்காரர்கள் என்பதனை இப்ராஹிம் அலி உணர வேண்டும்.

இவ்வளவு பலம் பொருந்திய நாடுகளுடன் நட்பை கொண்டிருக்கும்  மலேசியா அதன் வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கும் படியான செய்திகளை வழங்கும் இப்ரஹிம் அலியை கண்டிக்க வேண்டும்.

வெறும் மலாய் இனத்தை கவர்வதற்காக மட்டுமே அவர்களின் உணர்ச்சிகளை தூண்டுவது மிகவும் ஆபத்தாக போய்முடியும். இப்ராஹிம் அலி ஓர் உண்மையான மலேசியராக இருந்தால் முதலில் அரசாங்கம் இன நீதியாக  செயல் படுவதை தவிர்த்து  தேவையின் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என  அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டும்.  

மலேசியாவில் நாம் பல மொழிகளைப் பேசி, பல சமயங்களைத் தழுவி, பல கலாச்சராங்களுடன் வாழ்ந்துகொண்டு வருகிறோம்.

இப்ராஹிம் அலி   போன்ற  இன வாதிகளால் நம் நாடு சீரழிய நாம் விட்டுவிடக் கூடாது. பிரதமர்  நஜிப் நாட்டை ஒன்றுபடுத்த பாடுபட்டுக்கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இப்ராஹிம் அலி செயல்படுவது மக்களால் வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒன்று. நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

Comments