இந்தியரிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண பிஎஸ்சி அமைப்பீர்

இந்தியரிடையே குண்டர்தனத்துக்குத் தீர்வுகாண பிஎஸ்சி அமைப்பீர்

kula_01குண்டர்தனத்தில் இந்திய மலேசியர்கள் பெரிய எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கும் பிரச்னைக்குத் தீர்வுகாண நாடாளுமன்ற தேர்வுக்குழு(பிஎஸ்சி) ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் எம்.குலசேகரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
குண்டர்கும்பல் உறுப்பினர்களில் 29,000 பேர் இந்தியர்கள், சீனர்கள் 9,000 பேர், மலாய்க்காரர்கள் 3,000 பேர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.
குண்டர்கள்மீது கோலாலும்பூர் போலீஸ் தயாரித்துள்ள ஆய்வறிக்கை, இந்திய மலேசியர்களில் குண்டர்தன விகிதம் உயர்ந்திருப்பதற்கான காரணத்தை விவரித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தோட்டப்புறங்கள் தொழிற்சாலைகளுக்காகவும் வீடுகளை அமைக்கவும் அகப்படுத்தப்பட்டதால் அங்கிருந்த இந்திய இளைஞர்கள் அருகில் உள்ள நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள்.
ஆனால், கல்வித் தகுதியோ தொழில்திறனோ இல்லாததால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதன் விளைவு அவர்கள் குற்ற நடவடிக்கைகளை நாடத் தொடங்கினார்கள் என்றந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.   “மறுக்கமுடியாத இந்த உண்மைகள், இந்தியரிடையே குண்டர்தனமும் மது அருந்துவதும் தற்கொலையும் உயர்ந்த விகிதத்தில் இருப்பது ஏன் என்பதை விளக்குகின்றன”, என்றாரவர்.
பிஎஸ்சி அமைக்கப்படுவது இப்பிரச்னைக்குத் தீர்வுகாண உதவும் என்று குலசேகரன் கூறினார்.

“மேலும் அதிகமான இந்திய இளைஞர்கள் சுய-அழிவைத் தேடி அதே பாதையில் செல்வதைத் தடுக்க ஒரே வழிதான் உண்டு. அவர்களுக்குக் கூடுதல் கல்வி தொழில்நுட்பப் பயிற்சிகள் கிடைக்க வசதி செய்துகொடுக்க வேண்டும், வியாபாரத்தில் ஈடுபட சிறுகடன்கள் வழங்க வேண்டும்,  தகுதி உள்ளவர்களுக்குப் பொதுச் சேவையில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்”, என்றாரவர்.

Comments