2000 ஏக்கர் நிலம்: மற்றுமொரு ம.இ.கா ஹோல்டிங்ஸ் உருவாக்கமா?

2000 ஏக்கர் நிலம்: மற்றுமொரு ம.இ.கா ஹோல்டிங்ஸ் உருவாக்கமா?

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 6, 2013.
kulaஎனக்குக் கிடைத்த ஒரு குறுஞ்செய்தி தகவல் வழி 60,938 ரிங்கிட்டை பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் சார்பாக அதன் இயக்குனர் ஒருவர் (பெயர் குறிப்பிடப் படவில்லை) தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கருக்கு நில வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சீனப்பள்ளிக்கான நிலத்திற்கு வரி ரிம1தான்!

நிலப் பட்டா கூடிய விரைவில் கிடைக்குமென்றும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடன் விரைவில் ஓர் உடன்பாடு கையெழுத்தானவுடன் அந்த நிலம் மேம்படுத்தப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாரியத்தின் முதல் கூட்டம் நோன்புப் பெருநாள் கழித்து, பேராக் மாநில முதல்வர் முன்னிலையில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (சீனப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் வரி ரிங்கிட் 1 மட்டுமே என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.)

பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் எனப்படும் இந்த புதிய அறவாரியம் சில கேள்விகளை எழுப்பத் தூண்டுகிறது:

அறவாரியம் (FOUNDATION) என்று ஒன்றைப் பதிவு செய்தால் 1 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. அப்படிச் செலுத்தப்பட்டு உள்ளதா? உண்மையென்றால், அதைச் செலுத்தியவர் யார்? இந்த நிலம் அறவாரியத்தின் பெயரில் பதிவாகப் போகிறதா? அல்லது தனிப்பட இயக்குனர்களின் பெயரில் இயங்கப் போகிறதா?

60 ஆயிரம் ரிங்கிட்: யார் கொடுத்த பணம்? ..கா. கொடுத்ததா? அல்லது வீரசிங்கம் தன் சொந்தப் பணத்தைக் கொடுத்தாரா?

மஇகாவின் நிருவாகத் திறன்?

பல சந்தேகங்களை எழுப்பியிருக்கும் இந்த ஏற்பாட்டின் முழு விபரங்களையும் மக்களுக்கு தெரிவிப்பது மிக அவசியம்.

இதனை மேலும் குழப்புவது போல கணேசன் இந்தப் புதிய அறவாரியம் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் இந்த நிலம் மஇகாவை விட்டு போகக் கூடாது என்றும் சொல்கிறார்.

..காதான் எல்லவற்றையும் இந்தியர்களுக்காக செய்ய வேண்டும், மற்றவர்கள் கூடாது என்கிற தோரணையில் பேசியிருக்கிறார். இந்த மனப்போக்கு மாறவேண்டும். ..காவின் நிருவாகத் திறன் பல முறை சோதனை செய்யப்பட்டு தோல்வியில் முடிந்திருக்கிறது என்பதனை மக்கள் அறிவர்.

நிலம் தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த அமைப்புகளிடம்தான் போய் சேரவேண்டும் என்பதில் நான் உறுதியாய் இருக்கின்றேன்.

2008 இல் மக்கள் கூட்டணி ஆட்சியில் இருந்த போது சீனப்பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டது போல ஏன் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் தரப்படவில்லை என்று ..கா. உட்பட பல சமூக இயக்கங்கள் கேள்விகள் தொடுத்தன.

அவ்வேளையில் பேரா மாநிலத்தின் நில விவகார துறையின் பொறுப்பில் இருந்த  நா கோ மிங் மற்றும் ஙெ கு ஹாம் ஆகிய இருவரும் சீனப்பள்ளிகளைப் போல் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு கூட்டு வாரியம் இல்லாததினால், நிலத்தை யார் பெயரில் பதிவு செய்வது என்ற கேள்வி எழுந்திருப்பதாக கூறினர். இருந்தாலும், அப்போதைய  பேராக் மாநில முதலமைச்சராக இருந்த நிஜார்  முன்னிலையில் நிலம் ஒதுக்குவதற்கு கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அதன்படியே முதலில், தமிழ்ப்பள்ளிகளைப் பிரதிநிதிக்க ஒரு வாரியம் இல்லதாதால், அந்த நிலம் தற்காலிகமாக பேரா மாநில அறவாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பின்னர் தேசிய முன்னனி ஆட்சிக்கு வந்ததும்   வீரசிங்கம் கூறியிருந்தார்.

புதிய ம இ கா ஹோல்டிங்ஸ்?

பிறகு, பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியம் ((APETS)) அமைக்கப்பட்ட பின்பும், புதிதாக வேறொரு அறவாரியம் அமைக்கப்பட்டு பின்னர் அதனிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவரே சொன்னார்.

இன்று தமிழ் நேசன் நாளிதழ் வழி அறிக்கை விடுத்துள்ள வீரசிங்கம், புதிதாக பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் உறுப்பினர்களை பேரா மந்திரி புசார் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்பார்த்தது போல, வீரசிங்கம் அவருக்கு வேண்டியவர்களைக் கொண்டே (70 வயதைக் தாண்டியவர்கள் என்று தெரிய வருகிறது) ஒரு புதிய அறவாரியத்தைப் பதிவு செய்து அதன் வழி புதிய ..கா ஹோல்டிங்ஸ் ஒன்றுக்கு வழி வகுக்கிறார்.

நான் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. ஆனால், இந்த அறவாரியத்தின் புதிய உறுபினர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்.

இந்த அறவாரியத்தைப் பற்றி ஏன் வீரசிங்கம் அறிக்கை விடவேண்டும், அவர்தான்  பேரா மந்திரி புசார் ஆலோசகர் பதவியிலிருந்தும், பேரா ..கா தலைவர் பதிவியிலிருந்தும் தூக்கிஎறியப்பட்டு விட்டாரே? அவருக்கு இங்கு என்ன வேலை?

பேரா மாநிலத்தின் புதிய ..கா தலைவரான கணேசன் அல்லது  மந்திரி புசாரின் புதிய ஆலோசகர் இளங்கோ ஆகியோர்தானே  இது குறித்து அறிக்கை விட தகுதியானவர்கள், இல்லையா?  

வீரசிங்கம் இந்த அறவாரியத்தின் தலைமைப் பொறுப்பேற்க தகுதியானவரா? அல்லது அவர் காலத்தில் அவர் மக்களுக்காக செய்தமகத்தானசேவைக்கான அன்பளிப்பா?  

ஏற்கனவே தமிழ்ப்பள்ளிகளை முழுமையாக பிரதிநிதிக்கும் APETS போன்ற அமைப்புக்கள் இருந்தும் புதிதாக ஓர் அறவாரியம் அமைத்ததின் நோக்கமென்ன?

சீனப்பள்ளிகளை பிரதிநிதித்தி பள்ளி மேலாளர் வாரியம் இருப்பது போல் தமிழ்ப் பள்ளிகளை பிரதிநித்தித்து ஒரு தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் என்று ஒன்று இருந்தால் அதனிடம் இந்த நிலம் ஒப்படைக்கப்படும் என்று வீரசிங்கம் சென்ற வருடம் சொன்ன வார்த்தை என்ன ஆயிற்று?

வீரசிங்கம்  பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளை ஏமாற்றிவிட்டார். தன் சுயலாபத்திற்காக, தன்னுடைய சகாக்களக் கொண்டு ஒரு தனி அறவாரியம் அமைத்து அதன் வழி இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி உள்ளார்.

தலைமை ஆசிரியராக இருப்பவர் ஒருவர் இந்த அறவாரியத்தில் இருப்பதாகவும் அறிகிறோம். இது  உண்மையானால் இது சுயநல முரண்படுதல் உருவாகக் காரணமாக அமைந்துவிடும்.

மொத்தத்தில் இந்த நிலத்தை வீரசிங்கம் கடத்திவிட்டார், தவறான ஆலோசனைகளை வழங்கி பேரா மந்திரி புசாரை வீரசிங்கம் குழப்பியுள்ளார் .

..கா ஹோல்டிங்ஸ் மற்றும் எம்ஐஇடி போன்ற இயக்கங்களில் நடந்த ஊழல்களுக்கு துணை போன வீரசிங்கம் மற்றும் குமரன் போன்ற முன்னாள் ..கா தலைவர்கள்  இன்னும் ஏன் இந்த நிலத்திற்கு குறிவைத்து இதனையும் குட்டிச்சுவரக்கப் பார்க்கிறார்கள்?

இவருக்கு பேரா முதல்வரும் துணை போனது வருத்தற்குரியது. மஇகாவின் பழைய குப்பைகளையும் கில்லாடிகளையும் மறைமுகமாக வேறு உருவில் மீண்டும் நுழைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இது உண்மையாக இருந்தால், நிச்சயம் இதன் முடிவும் ஒரு குட்டி ..கா ஹோல்டிங்ஸ் போலத்தான்  இருக்கும்.

..காவின் தேசியத் தலைவர் பழனிவேலுவிடம் ஒரு வேண்டு கோளை விடுக்கிறேன்: தயவு செய்து இந்த 2 ஆயிரம்  ஏக்கர் நிலத்தை  வீரசிங்கம் போன்ற தனி மனிதர்களின் சொத்தாவதை  நிறுத்தி  உடனடியாக தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த ஓர் அமைப்பிற்கு வழங்கி சீனப்பள்ளிகளுக்கான அறவாரியம் செய்தது போல தமிழ்ப்பள்ளிகளுக்கும்  செய்து புண்ணியம் தேடிக் கொள்ளுங்கள். உங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வீரசிங்கத்தையும்  குமரனையும் வெளியேற்றுங்கள்.

இந்தியர்களாகிய நாம், இந்த நிலத்தை வீரசிங்கமும் அவரின்  கூட்டாளிகளும் கடத்திச் செல்லாமலிருக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருவோம்.


Comments