மு.குலசேகரன் - 2011 ம் ஆண்டு வரவு செலவு திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்து.

பூர்வகுடிமக்கள் சம்பந்தமான சட்டம் அவர்களின் அனைத்து மேம்பாட்டுக்கும் தடையாக இருக்கும் வேளையில் அதனை அரசாங்கம் முற்றாக அழித்தல் வேண்டும். மேலும் இவர்களின் கிராமத்து தலைவர்களுக்கு சிறப்பு ஊதியம் இவர்களின் மனதை கவர்வதற்காக வழங்கப்படும் செயலாக பிரதிபளிக்கிறது. காரணம் அவை அனைத்தும் நிர்வாக உயர்வை தான் கொண்டுவருமே ஒழிய வாழ்க்கை மேம்பாட்டை கிடையாது. இவர்களின் பூர்விகத்தை அரசாங்கம் முழுமையாக அங்கீகரித்து இவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய வகை செய்ய வேண்டும்.

- சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிகையை கருத்தில் கொண்டு எத்தனை புதிய சீன மற்றும் தமிழ் பள்ளிகளை கட்டவுள்ளது என்ற விவரத்தை தெளிவுபடுத்த வில்லை. ஒவ்வொரு முறை கல்வி அமைச்சு ஒரு குறிப்பிட்ட தொகை தமிழ் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டது என்று சொல்வதும் அதற்க்கு பிறகு அதனை கூட்டி இன்னொரு தொகையை ம.இ.க அமைச்சர்கள் கூறுவதும் வியப்பாக உள்ளது. கல்வி மேம்பாட்டிலும் கண்ணாமூச்சி ஆட்டம் எதற்கு. ஆகவே மத்திய அரசாங்கம் இதனை எண்ணத்தில் கொண்டு சீனர்கள் மற்றும் இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஒரு புதிய வடிவத்தை உருவாக்கவேண்டும்.

- நாட்டில் பல திறமைசாலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் என்னென்ன நடவடிக்ககளை மேற்கொண்டுள்ளது என்று அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும். ஏன் இந்நாட்டில் பிறந்து ஆரம்ப கல்வி பயின்று, அதன் பிறகு வெளி நாடுகளுக்கு சென்று உயர் கல்வி முடித்தவுடன் நாடு திரும்ப இவர்களுக்கு விருப்பமில்லை? மேலும் பலர் நாடு திரும்பினாலும் சிங்கப்பூரில் வேலை செய்கிறார்கள். இவர்களின் வெளிநாட்டு உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கப்படும் பொழுது அதனை முறையான சட்டப்படி இவர்களுக்கு வழுக்குதல் வேண்டும். அதனை தொடர்ந்து இவர்கள் இந்நாட்டில் வேலை செய்ய வாய்ப்பும் தகுந்த ஊதியமும் வழங்கப்படுதல் வேண்டும். நாடு முன்னேற்றம் பெற இளைஞர்களின் பங்கு அளப்பரியது. அதிலும் இவர்களின் திறமை வெளிநாடு முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்தினால் நம் நாடு வளம் நிறைந்து முன்னேற்றம் காணாத நாடாக திகழும்.

- ஏன் இன்னும் மலேசியா சர்வதேச நீதி மன்ற உறப்பினர் பட்டியலில் இடம் பெற முயற்ச்சி செய்யவில்லை. பல முறை இதனை குறித்து நடாளும்ட்ரத்தில் கேள்வி எழுப்பியும் அரசாங்கம் பொருப்படுத்தவில்லை.

- இறுதியாக இந்தியர்களின் எதிர்காலத்தை தவிடு பொடியாக்கிய மைக்கா நிறுவன முதலீட்டு விவகராத்தை விசாரிக்க அரச விசாரணை குழு ஒன்றை அமைத்து முழுமையா புலனாய்வு செய்ய வேண்டும். இந்து நாள் வரை இப்பிரச்சனை குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணையமும் காவல்துறையும் கண்டு காணாதது போல் இருப்பது, தேசிய முன்னணியின் சூழ்ச்சியும் இதில் அடங்கியுள்ளது போல தெரிகிறது. மக்கள் நலன் காக்கப்படும் என்று சொல்லும் தேசிய முன்னணி, மைக்கா நிறுவன விவகாரத்தில் ஏமாற்றம் கண்ட இந்தியர்களின் உணர்வை மதிக்காதது ஏன்? தனது இரும்புக்கு கரங்கள் கொண்டு முதலீட்டார்களின் பணத்தை அடிமட்ட விலைக்கு விற்ற மைக்கா நிறுவனத்தின் நயவஞ்சக செயலுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.

Comments