Call on the Perak and Federal Government to organize a round table conference to discuss openly the proposed acquisition of the DIA land and...

Last week the Federal Government issued notice to acquire the land measuring about 2hectares belonging to the Dindings Indian Association (DIA.)

Part of the land is also where SK Simpang Empat (formerly Simpang Empat English School) is located.

The formal Hearing of the acquisition is scheduled to be held on 25thAugust 2010 at the Manjung Land office.

The Perak BN Government's Indian affairs representative. Dato Veerasingam is widely reported to have said that "a settlement will be reached" after discussion with Mentri Besar Datuk Zamri who is overseas now.

The local Indian community has been given to understand that nearly a year ago, feasibility studies were done by the government to acquire the land. The Perak and Federal government agencies were involved in this process.

The community therefore demands answers from Dato Veerasingam:

1) Was he aware of the feasibility studies? Was Perak state government consulted before the acquisition?

2) Why was there no prior consultation with the local Indian community?

3) Why has he said that a settlement can be reached only after formal notice of proposed acquisition has been issued?

4) What is the settlement formula?

5) Is it true as speculated that after the acquisition, part of the land will be given to people who are closely connected to the people in power for commercial development?

The local Indian community is angered by the proposed acquisition. They have every reason to feel so as the proposed acquisition is most insensitive, unfair and unjustifiable.

The community cannot understand why the land is the target of acquisition when there are so many vacant lands where a new school could be built.

The said land was bought by the monies and sweat of the Indian estate laborers in the late 1930's.

This is the only land left in the heart of Sitiawan town which the Indian community can say it’s theirs.

I call on the Perak and Federal Government to organize a round table conference to discuss openly this issue and find a win win solution.

10/08/2010 - ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜ.செ.க-வின் தேசிய உதவித் தலைவருமாகிய மு.குலசேகரனின் பத்திரிக்கை அறிக்கை

மீண்டும் வெளிச்சத்திற்கு வருகிறது டிண்டிங்ஸ் இந்தியர் சங்க நிலப்பிரச்சனை

கடந்த வாரம் மத்திய அரசாங்கம் டிண்டிங்ஸ் இந்தியர் சங்கத்திற்கு சொந்தமான 2 ஹெக்டர் நிலம் குறித்து ஆரம்ப கட்ட மக்களின் நிலைபாட்டினை அறிந்து கொள்ள அனைவருக்கும் முன் அறிவுப்பு கடிதம் ஒன்றினை வழங்கியது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான கலந்துரையாடல் வருகிற ஆகஸ்ட் 25 ம் திகதி மன்ஜோங் நில அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

டிண்டிங்ஸ் இந்தியர் சங்கப் பிரச்சனையை எந்த ஒரு தரப்பினரும் அரசியலாக்க வில்லை என்பதனை டத்தோ வீரசிங்கம் புரிந்து கொள்ளல் வேண்டும். இந்த நிலப்பிரச்சினை குறித்து பொது மக்களுடன் கருத்து ஆலோசனை பெறமுயல்வது மிகவும் சிறந்த வழியாகுமே ஒழிய ம.இ.கவை சார்ந்த நிர்வாக உறுப்பினருடன் கலந்துரைடயால் ஏற்பாடு செய்தது, யார் இவ்விவகாரத்தை அரசியல்லாக முயல்கிறார்கள் என்பதனை டத்தோ வீரசிங்கம் நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும்.

பேராக் மாநில தேசிய முன்னனின் ஆட்சியில் மந்திரி பெசாரின் இந்திய பிரிவு ஆலோசகராக செயல்படும் டத்தோ வீரசிங்கம் இந்த பிரச்சனையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பது அவரின் தகுதியற்ற செயலை தெளிவுபடுத்துகிறது. இப்பிரச்சனை குறித்து தாம் மாநில மந்திரி பெசாருடன் கலந்து பேசிய பிறகுதான் நல்ல முடிவை பிறப்பிக்க முடியும் என்ற எண்ணம் அனைவரின் எதிர்பார்ப்பே ஒழிய உறுதியான முடிவுகிடையாது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அரசியல் நெருக்கடியில் மாநில ஆட்சியை தேசிய முன்னணி கைப்பற்றிய பிறகு இவ்விவகாரம் ஒரு தீர்வற்ற தொடர்கதையாக மாற்றம் கண்டுள்ளது.

இந்நிலப் பிரச்சனை தொடர்பான சூழ்நிலை குறித்து எங்களுக்கு தெரிந்த வகையில், மத்திய அரசாங்கம் சில சாத்தியகூறு அறிக்கைகளை ஒருவருட காலத்திற்கு முன்பே தயார்செய்ய தொடங்கியது என்பதனை மறுக்கவும் மறைக்கவும் முடியாத ஒன்று. இவ்விவகாரம் மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் கூட்டு முயற்சில் நடந்தது என்பதும் உண்மை. அதன் சூழ்நிலையில் மாநில இந்திய பிரிவு ஆலோசகர் டத்தோ வீரசிங்கத்திர்க்கு ஒரு சில கேள்விகள் :

1. இந்த நிலப்பிரட்சனையை நீங்கள் நன்கு அறிவீர்களா?
2. இதற்க்கு முன்பு மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்துடன் இந்நிலத்தை கைப்பற்ற விருப்பத்தினை தெரிவிக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றதா இல்லையா?

3. அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட பிறகு எதற்க்காக இப்பிரச்சனை குறித்து தீர்வுகாணும் முயற்சி எடுக்கப்படுகிறது?

4. அந்த சூழ்நிலையில் தீர்வு நிலை முடிவின் உச்சக்கட்ட முடிவு என்னவாக இருக்கும்?

5. எதற்க்காக இந்தியர்கள் தனது சொந்த நிலத்தை தர்காப்பதற்க்காக இவ்வளவு போராட வேண்டியுள்ளது? இச்சூழ்நிலையை தவிர்க்க, ஆரம்ப நிலையில் கலந்தாலோசித்து நல்ல முடிவினை எடுக்க ஏன் தாமதம் ஏற்பட்டது? இது மக்கள் விருபத்திற்கு மாறான செயல் இல்லையா?


எங்களுக்கு கிடைக்கப்பெற்ற கருத்துப்படி மக்கள் இந்நிலப்பிரட்சனை குறித்து மிகவும் வேதனை அடைவது மட்டுமில்லாமல், இந்தியர்களின் நிலத்தை எதற்காக அரசாங்கம் கூறுப்போட முயல்கிறது என்ற கேள்வியும் கூடவே எழ செய்கிறது.
எத்தனையோ காலி நிலங்களில் புதிய பள்ளிகூடங்களை கட்ட விருப்பம் தெரிவிக்காத அரசாங்கம் இந்நிலத்தை பள்ளியின் பெயரில் கைப்பற்ற நினைப்பது என்ன நியாயம்? இதில் ஏதோ ஒரு மறைமுக நோக்கம் உண்டு என்ற கருத்து கேள்விக்குறியாகவே உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்நிலத்தை கைப்பைற்றிய பிறகு, இந்நிலத்தின் பாதி இடத்தை ஒரு சில அதிகாரத்திலுள்ள நபர்களின் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு வர்த்தக மேம்பாட்டிற்கு வழங்கவும் திட்டம் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலம் கடந்த 1930 ம் ஆண்டில் தோட்ட மக்களின் வியர்வை சிந்தி வாங்கியதை அனைவரும் கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிற்கும் இது தொடர்பான சித்தியவான் இந்து சங்கம் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் நிலைபாட்டினை தெரிவிக்க ஒன்றாக வரவேண்டும் என்பதனை இதன் வழி தெரிவிக்கின்றேன்.

அதே சமயத்தில், இது தொடர்பாக மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் பொதுமக்களுடன் வட்ட மேசை கூடம் ஒன்றினை ஏற்பாடு செய்து அதில் பொது மக்களின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

Comments