ஈப்போ கல்லுமலை அருள்மிகு சுப்ரமணியர் ஆலய ராஜ கோபுரம் யாருடைய முயற்சியின் அடையாளம்?

கடந்த 2007 வது வருடம், ஆலய நிர்வாகக் குழு ராஜ கோபுரம் எழுப்பும் நோக்கத்தை ஈப்போ மாநகராட்சி மன்றத்துக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஆலயம் முன்புறத்தில் திட்டமிட்டபடி 69 அடி உயர ராஜ கோபுரம் அமைப்பதற்கு ஒப்புதல் கடிதம் ஒன்றை பெற முயற்சி செய்தது. இருப்பினும், காரணங்களை தெரிவிக்காமல் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்தவர் முன்னாள் ஈப்போ மாநகராட்சி மன்ற தலைவர் டத்தோ ராபாய் ஆவர்.

2008 ம் ஆண்டு மார்ச் 8 -ம் திகதிக்கு பிறகு, மக்கள் கூட்டணி பேராக் மாநில ஆட்சியை தன்வசம் கொண்டபொழுது, ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு ஆ.சிவநேசனை சந்தித்து ஒரு புதிய விண்ணப்பத்தை ஒன்றை சமர்பித்தனர். அதன் பிறகு, முன்னாதாக விண்ணப்பத்தை நிராகரித்த காரணம் கோரும் கடிதம் ஒன்று முன்னாள் ஈப்போ மாநகராட்சி மன்ற தலைவர் டத்தோ ராபாய் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. சம்பத்தப்பட்ட விண்ணப்பம் அப்படியே அங்கிகரிக்கப்பட்டிருந்தால் அவை ஒரு சிலரின் மதம் மற்றும் மன உணர்ச்சியை தூண்டும் அளவிற்கு சூழ்நிலை உருவாக்கும் நிலை ஏற்படும் என்று, டத்தோ ராபாய் அவர்கள், தனது பதில் கடிதத்தில் கூறியிருந்தார்.

இருப்பினும், பத்து மலை முருகன் சிலை, கிளாந்தான் மாநிலத்தில் புத்தர் சிலை போன்ற பல முன் உதாரணங்களை சுட்டிக் காட்டி, இந்த 69 அடி உயர ராஜ கோபுரம் கட்டுமான திட்டத்திற்கு எந்த ஒரு தடையும் இன்றி அனுமதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, இவ்விவகாரம் குறித்து மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதற்க்கு மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நிஜார் அவர்கள் தனது ஒப்புதலை மனப்பூர்வமாக தெரிவித்தார். அதே சமயம் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இந்த ராஜ கோபுர கட்டுமானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த 2008 ம் ஆண்டு டிசெம்பர் மாதம், பேராக் மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் ஈப்போ மாநகராட்சி மன்றத்திற்கு அனுமதி வழங்கும் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதே மாதம், எந்த ஒரு தங்கு தடையுமின்றி, ஈப்போ மாநகராட்சி மன்றம் மாநில அரசாங்கத்தின் முடிவுக்கு இணங்க 69 அடி உயர கல்லுமலை அருள்மிகு சுப்ரமணியர் ஆலய ராஜ கோபுரத்திற்க்கு ஒப்புதல் தெரிவித்தது. அதன் அனுமதி கடிதத்தை மாண்புமிகு ஆ.சிவநேசன், ஆலயத்தின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற திரு.சிதம்பரம் அவர்களிடம் வழங்கினார்.

"இந்தியர்களே, சற்று சிந்தித்து பாருங்கள். கடந்த காலங்களில் நம்முடைய சமய பிரச்சனைகள் இழுப்பரியாகவே தான் இருந்துள்ளது. அதற்க்கு ம.இ.க-வும் தேசிய முன்னணியும் எந்த ஒரு சிறந்த நடவடிக்கைகளை எடுத்ததே கிடையாது. மக்களுக்கு ஆட்சி செய்கிறோம் என்று சொல்லும் தேசிய முன்னணி, இந்தியர்களின் சமயத்தை மதிக்காதது ஏன்? நமது உரிமை மறுக்கப்படுகிறது. சமய சுதந்திரம் உண்டா நமக்கு? மக்களுக்கு முக்கியத்துவம் என்று சொல்லிக்கொண்டு நமது கலாசாரத்தை அடியோடு அளிக்க நினைக்கும் இவர்களை புறக்கணிப்போம். "

கல்லுமலை அருள்மிகு சுப்ரமணியர் ஆலய ராஜ கோபுர கட்டுமான பணி நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த ராஜ கோபுரம் மக்கள் கூட்டணியின் வெற்றியின் சின்னமல்ல, மக்கள் கூட்டணி மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் சின்னமாகும்..

கடந்த காலத்தைப் படிப்பினையாகக் கொண்டு எதிர்காலப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடரும் இந்நடவடிக்கையில் நாம் கைகோர்த்துச் செயற்படுவோம். மக்களின் பூரண ஆதரவு அதற்கு அவசியம்.

இப்படிக்கு - பேராக் மாநில மக்கள் கூட்டணி

Comments